தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் படையப்பா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மறைந்த நடிகை செளந்தர்யா நடித்திருந்தார். வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.இசையமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்.
இப்படத்தில் இடம்பெற்ற தொடக்கப்படலான ''எம் பேரு படையப்பா '' என்ற , கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடலில், நான் மீசை வைச்ச குழந்தையப்பா என்று ஒரு வரி வரும் அப்போது, ஒரு 6 மாதக் குழந்தையின் முகம் ஸ்கிரீனில் தெரியும். அவர் இப்போது ஒரு வீடியோவில்., ரஜினி சாரின் படத்தில் நடித்தது எனக்கு பெரிய மகிழ்ச்சி. அப்பாடலில் மீசை குழந்தையப்பா என்ற வரியில் திரையில் வரும் முகம் என்னுடையது தான். அப்போது ஷூட்டிங் பார்க்கச் சென்றோம் என்று தெரிவித்துள்ளார். . அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாசமுள்ள மனிதனப்பா நான் மீசை வச்ச குழந்தையப்பா....
எம் பேரு படையப்பா பாடலில் தலைவர் முகம் குழந்தை முகமாக மாறும்...
அந்த பெண் தான் இவர்...#Rajinikanth#Jailerpic.twitter.com/g1ifvgICXL