எம்மவரின் இச்செயல், நீண்ட பயணத்தின் முன்னோட்டம் – கமல்ஹாசன்

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (21:34 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், நம்மவரின் நல்லவர்களான மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் சென்று, வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டைகளைப் பெற வழி காட்டியிருக்கிறார்கள். இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உதவியிருக்கிறார்கள் எனப் பதிவிட்டுள்ளார்,.
 
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் வாக்காளர் அடையாள அட்டை குறித்து, வாக்களிப்பது குறித்து விளிப்புணர்வு  ஏற்படுத்துவதற்காக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இது அநேக மக்களைச் சென்றடைந்தது மட்டுமல்லாமல் மக்கள் நீதி மையம் கட்சியினர் இதுகுறித்து கிராம மக்களிடம் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிலையில் இதுகுறித்து அவர் தனதுடுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

’’தமிழகம் முழுக்க அனைத்து  தொகுதிகளிலும் ஒவ்வொரு பூத்திலும் நம்மவரின் நல்லவர்களான மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் சென்று, வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டைகளைப் பெற வழி காட்டியிருக்கிறார்கள். இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உதவியிருக்கிறார்கள். எம்மவரின் இச்செயல், நீண்ட பயணத்தின் முன்னோட்டம். வரவிருக்கும் வெற்றிகளின் வெள்ளோட்டம். நம்
அன்பு இளைஞர் படையின்  வீரர்களை ஆரத் தழுவுகிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்