இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
எனவே அத்தனை கட்சிகளும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் அதன் கூட்டணிக்கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து குற்றம்சுமத்தி விமர்சனங்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ராயபேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தார். அப்போது மேடையில் பேசிய அவர், தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்ட முதல்நாளே கைது செய்யப்பட்டேன். இப்போது கலைஞர் இருந்தால் பெருமைப்பட்டிருப்பார் எனத் தெரிவித்தார்.
மேலும், இங்கு நான் வந்ததற்கே மக்களின் எழுச்சி என்றால் திமுக தலைவர் வந்தால் எப்படி இருக்கும் ? நான் வெறும் டிரைலர் தான் மெயின் பிக்சர் தலைவர் ஸ்டாலின் வந்தால் எப்படி இருக்கும் எனப் பேசினார். மேலும் விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி வரப்போகிறது எனக்கூறினார்.