சசிகலா வந்ததும் எடப்பாடி போய் காலில் விழுவார்... உதயநிதி ஆருடம்!!

சனி, 26 டிசம்பர் 2020 (08:58 IST)
234 தொகுதிகளிலும் கலைஞர்தான் களத்தில் நிற்கிறார் என நினைத்து ஓட்டு போடுங்கள் என உதயநிதி கோரியுள்ளார். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக இப்போதே தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுபயண பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
 
இந்நிலையில் பிரச்சாரத்தின் போது, சசிகலா ஜனவரி மாதம் ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார். அவர் வந்தால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அவர் காலில் போய் விழுவார். எப்படி நீங்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு நல்ல பாடத்தை கற்று கொடுத்து திமுக கூட்டணியை மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற செய்தீர்களோ அதேபோல் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியை ஆதரித்து வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன். 
 
நாடாளுமன்ற தேர்தலில் தலைவர் ஸ்டாலின் எப்படி ஒரு வெற்றி கூட்டணியை அமைத்தாரோ, அதேபோல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கும் வெற்றி வேட்பாளர்களை அறிவிப்பார். 234 தொகுதிகளிலும் கலைஞர்தான் களத்தில் நிற்கிறார் என நினைத்து நாம் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்