அரசப் பயங்கரவாதத்தின் பேரவலமே ஜெய் பீம்…. திருமாவளவன் பாராட்டு!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (10:42 IST)
சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமா வளவன் பாராட்டியுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் நேற்றிரவு வெளியானது. வெளியாவதற்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பு இருந்த இந்த திரைப்படம் இப்போது பல தரப்பினரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. சூர்யாவின் சூரரைப் போற்று ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இப்போது ஜெய் பீம் திரைப்படமும் வெற்றியை உறுதி செய்துள்ளது.

பலரும் பாராட்டி வரும் இந்த படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன் பாராட்டியுள்ளார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ’சட்டம் - அது வலியவனைக் கண்டால் வளைந்து கொடுக்கும். எளியவனைக் கண்டால் எட்டி உதைக்கும் இது சிறுத்தைகளின் அரசியல் முழக்கம். காலம் காலமாய் வஞ்சிக்கப்படும் வதைக்கப்படும் பழங்குடி மக்களின் பாழும் வாழ்வைப் பாடமாய் விவரிக்கும் படமே ’ஜெய் பீம்’. ’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்