தமிழ் சினிமாவுல இதுமாதிரி சம்பவம் நடந்ததே இல்லை…

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (18:04 IST)
படம் ரிலீஸாகி இரண்டு வாரங்கள் ஆனபிறகு, ஒரு படத்தின் இசை உரிமை விற்கப்பட்டிருக்கிறது.


 

 
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இயக்கி, ஹீரோவாக நடித்த படம் ‘மீசைய முறுக்கு’. சுந்தர்.சி தயாரித்த இந்தப் பட, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தின் பாடல்களை, தனது யூ டியூப் மற்றும் சுந்தர்.சி.யின் அவ்னி மியூஸிக்கில் வெளியிட்டனர். இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, இந்தப் படத்தின் இசை உரிமையை, பிரபல நிறுவனமான ‘திங்க் மியூஸிக்’ வாங்கியிருக்கிறது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து ஒரு படத்தின் இசை உரிமை விற்கப்படுவது, தமிழ் சினிமாவிலேயே இதுதான் முதல்முறை என்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்