’தளபதி 68’ படத்தில் இந்த மூன்று நடிகைகள் கண்டிப்பாக கிடையாது: வெங்கட்பிரபு

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (15:05 IST)
தளபதி விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகிகள் குறித்த தகவல்கள்  அவ்வப்போது கசிந்து வருகிறது. 
 
இந்த நிலையில் இந்த மூன்று நடிகைகள் தளபதி 68 படத்தில் கிடையாது என்று இயக்குனர் வெங்கட் பிரபு முடிவு உறுதி செய்துள்ளார். தளபதி விஜய்யின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் தளபதி 68. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நடிகைகளும் ஹீரோயினாக நடிக்க மாட்டார்கள் என்பதை வெங்கட் பிரபு உறுதி செய்துள்ளார். 
 
ஏற்கனவே இந்த படத்தில் ஜோதிகா நாயகியாக நடிக்க இருக்கும் நிலையில் மேற்கண்ட 3 நடிகைகளும் இல்லை என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது3
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்