பத்து தல படத்தில் ஏன் நடித்தோம் என்ற பயம் இருந்தது என்று நடிகர் சந்தோஷ் பிரதாப் கூறியுள்ளார்.
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் கழுவேத்தி மூர்க்கன். இப்படத்தை ராட்சசி படத்தை இயக்கிய சை கவுதமராஜன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில், ஹீரோயினாக துஷாரா நடிக்கிறார். சாயாதேவி, பிரதாப் சாயா, முனிஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் நிலையில், டி.இமான் இசையமைக்கிறார். கடந்த 19 ஆம் தேதி இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்களைக் கவர்ந்தது. இப்படம் நாளை( மே 26 ஆம் தேதி) தியேட்டரில் ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்த நிலையில், கழுவேத்தி படத்தில் நடித்துள்ள நடிகர் சந்தோஷ் பிரதாப் கூறியதாவது:
''கழுவேத்தி மூர்க்கன் படம் என் எனக்கு முக்கியமான திரைப்படம். இப்படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் எனத் தெரியாது. தயாரிப்பாளர் இப்படத்தைப் பாராட்டினார்'' என்று கூறியுள்ளார்.
மேலும், ''பத்து தல படத்தில் ஏன் நடித்தோம் என்ற பயம் இருந்தது. இதை மக்கள் பாராட்டினார்கள். இப்படத்தில் நடித்தது பற்றி நான் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.'' என்று தெரிவித்துள்ளார்.