ஹன்சிகா நடிக்கும் காந்தாரி படத்தின் ரிலீஸ் எப்போது?

vinoth

திங்கள், 3 ஜூன் 2024 (07:31 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு திரை எழுத்தாளர் மா தொல்காப்பியன் கதை எழுத, தயாரிப்பாளர் கோ தனஞ்செயன் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டே தொடங்கிய நிலையில் தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை ஜூலை மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் ஹன்சிகா அரசு அதிகாரி மற்றும் நரிகுறவ பெண் என இரு வேடங்களில் நடிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்