விஜய், தனுஷை அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2017 (00:08 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தை பிரமாண்டமாக தயாரித்து மாபெரும் வெற்றிப்படமாக்கிய ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம், அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.







இந்த நிலையில் விஜய், தனுஷை அடுத்து சிவகார்த்திகேயன் பக்கமும் இந்த நிறுவனம் சாய்ந்துள்ளது. ஆம், சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' படத்தின் செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து இந்நிறுவனம் பெற்றுள்ளது. சென்னையை விட அதிக வசூலை தரும், மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ் திரையரங்குகள் அதிகம் உள்ள ஏரியா இது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் இந்த படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் அதிகளவிலான திரையரங்குகளில் வெளியிட ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அனேகமாக இதுவரை இல்லாத வகையில் இந்த ஏரியாவில் அதிக திரையரங்குகளில் வெளியிடும் படம் இதுவாகத்தான் இருக்கும்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்