இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று இந்த பிரச்சனையில் களத்தில் குதித்துள்ளார். தனது டுவிட்டரில் இதுகுறித்து அவர் கூறியதாவது: பத்மாவதி’ பிரச்சனையில் நடிகை தீபிகாவை பாதுகாக்க வேண்டும். இதேபோல் என்னுடைய படங்களுக்கும் பிரச்சனைகள் எழுந்தன. உடலுக்கு தலை முக்கியம். இங்கு தீபிகாவின் தலை காப்பாற்றப்பட வேண்டும். அதை விட அவருக்கான சுதந்திரத்தை காக்க வேண்டும். இது சிந்திக்க வேண்டிய நேரம். நிறைய சொல்லியாகி விட்டது. கேட்டுக் கொள் பாரத மாதாவே! என்று குறிப்பிட்டுள்ளார்.