திரையரங்குகள் தொடர்ந்து இயங்கும்…. உரிமையாளர்கள் முடிவு!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:58 IST)
தமிழகத்தில் திரையரங்குகள் தொடர்ந்து இயங்கும் என திரையரங்க உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேரத்தில் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் இரவுக் காட்சி பாதிக்கப்படும் சூழல் உள்ளது மேலும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது திரையரங்குகளில் நேரம் மாற்றப்படுவது குறித்து நாளை திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அந்த் ஆலோசனையின் முடிவில் தியேட்டர்கள் முற்றிலும் அழிந்துவிடாமல் இருக்க தொடர்ந்து திரையரங்குகளை இயக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்