இந்நிலையில் கூடுதல் தடுப்பூசி வழங்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த வார இறுதியில் தடுப்பூசிகள் தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் புனேவிலிருந்து விமானம் மூலமாக 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகம் இன்று வந்து சேர்ந்தது. சென்னை விமான நிலையம் வந்தடைந்த இந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பாதிப்பு நிலவரம் சார்ந்து பகிர்ந்தளிக்கப்படும் என கூறப்படுகிறது.