காவல்துறையினரால் மறைக்கப்பட்ட உண்மை..! "அடங்க மறு" நீக்கப்பட்ட காட்சி!

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (17:22 IST)
அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கிய படம் அடங்கமறு .



இவர் இயக்குனர் சரணின் உதவியாளர். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வெளிவந்த இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு  ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருந்தார். 'விக்ரம் வேதா' படப் புகழ் சாம்.சி.எஸ். இசை அமைக்க சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பை ரூபன் கவனிக்க ஆர்ட் டைரக்டராக லால்குடி இளையராஜா பணியாற்றினார்.
 
அடங்கமறு கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. முழுக்க முழுக்க காவல் துறையை மையப்படுத்திய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் படத்திற்கு அமோக விமர்சனமும் கிடைத்தது. 
 
இந்த நிலையில், தற்போது  இப்படத்தில் இடம் பெற்றுள்ள நீக்கப்பட்ட காட்சியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில், காசு வாங்கிக் கொண்டு வேலை பார்க்கும் காவல் துறை, கடமைக்காக வேலை பார்க்கும் காவல் துறை என்று நடிகர் ஜெயம் ரவி குற்றங்களை கண்டுபிடிக்க புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் உண்மையான போலீஸ் அதிகாரியாக கூறியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்