நடிகர் விஜய்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி கூறி அறிக்கை!

Sinoj
திங்கள், 11 மார்ச் 2024 (22:52 IST)
நடிகர் விஜய்க்கு  நன்றி தெரிவித்து  தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் , நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்ட 40 கோடி ரூபாய் கடன் பெற பொதுச்செயலாளர் விஷால் ஒப்புதல் கோரினார். 
 
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இதையடுத்து, கொரோனா காலத்தில் விலைவாசி 30 சதவீதம் உயர்ந்துள்ளதால்,  40 கோடி ரூபாய் வரை வங்கியில் கடன் வாங்க தகுதி உள்ளது என்று என்று தெரிவித்திருந்தார்.
 
மேலும்,  வாங்கும் கடனை அடைக்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும், ரஜினி, கமல் போன்றவர்களிடம் நிதி கேட்கத் திட்டமிட்டுள்ளதாகவும் நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியிருந்தார். 
 
சமீபத்தில்,  நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட அமைச்சர் உதயநிதி மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதியாக வழங்கியிருந்தனர்.
 
இந்த நிலையில், இன்று நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதியை நடிகர் சங்கத்திற்கு வழங்கியுள்ளார்.
 
இதற்கு நடிகர் விஜய்க்கு  நன்றி கூறி, தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதில்,  தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளைத்தொடர ஏதுவாக நடிகர் திரு.விஜய் அவர்கள் நடிகர்சங்கத்துக்கு வளர்ச்சிநிதியாகஅவரது சொந்தநிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாகவழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது''என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்