நயன்தாரா 75 வது படமான அன்னப்பூரணி படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் அடுத்து நடித்துள்ள படம் அனனப்பூரணி. இந்த படத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில், ஜீ ஸ்டுடியோ நிறுவனம் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அன்னப்பூரணி படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்தது. அதன்படி, தற்போது இப்பட ரிலீஸ்தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதில், வரும் டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகும் என தெரிவித்து, நயன்தாராவின் புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது.