கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், வாக்குறுதிகளை 100% நிறைவேற்றி விட்டோம் என்று முதல்வர் கூறுகிறார். மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை கொஞ்சம் கூட கவலை இல்லாமல் வாய்க்கு வந்தபடி இஷ்டப்படி நூறு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொய் பேசுகிறார். இது தமிழ்நாட்டின் மக்களின் காதில் பூ சுற்றுவதை தான் குறிக்கிறது.
தற்போது ஒரு கோடி பேருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறுகின்றனர். இந்த ஆயிரம் ரூபாய் கூட பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கொடுப்பார்களா என்பது சந்தேகமே. 234 தொகுதிகளிலும் புகார் பெட்டி வைப்பேன் என்றும் அதில் உள்ள அனைத்து கடிதங்களையும் நானே படித்து தீர்வு காண்பேன் என்றும் முதல்வர் கூறினார், அது என்ன ஆச்சு? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.