‘ரெட்ரோ’ வெற்றி அடைந்தால் தான் வாய்ப்பு.. கார்த்தி சுப்புராஜூக்கு செக் வைத்த பிரபல நடிகர்..!

Siva

செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (20:53 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ படம் வரும் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படத்திற்கான திரைக்கதையை தயார் செய்து விட்டதாகவும், அந்த கதையை அவர் சிவகார்த்திகேயனிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த சந்திப்பின்போது சிவகார்த்திகேயன் கார்த்திக் சுப்புராஜின் கதையை கேட்டு, "ஒரு மாதம் டைம் கொடுங்கள், நான் யோசித்து சொல்கிறேன்" என்று கூறியிருப்பதாக தெரிகிறது. 
 
இந்த ஒரு மாத டைம் அவர் எதற்காக கேட்டிருக்கிறார் என்றால், அவர் இயக்கிய ரெட்ரோ படம் வெற்றியடைந்தால் வாய்ப்பு கொடுக்கலாம், இல்லாவிட்டால் வாய்ப்பு கிடையாது என்ற எண்ணத்தில் அவர் கூறியிருக்கலாம் என்று திரை உலக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
 ஏற்கனவே, வெங்கட் பிரபுவுக்கு ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கொடுப்பதாக சிவகார்த்திகேயன் கூறிய நிலையில், "கோட்" திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அதேபோன்று, ’ரெட்ரோ’ ரிலீஸ் ஆகி, அது நல்ல ரிசல்ட் வந்தால் மட்டுமே கார்த்திக் சுப்புராஜ் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று கூறப்படுகின்றது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்