ரஜியின் அண்ணாத்த படத்திற்கு வந்த சிக்கல் !

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (22:16 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்குமா என்பது குறித்த தகவல்  வெளியாகியுள்ளது.
 

சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படம் பல கோடி ரூபாய் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் குஷ்பூ மீனா நயன்தாரா கீர்த்தி சுரேஷ் பிரகாஷ்ராஜ் சூரி உள்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளனர் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ’அண்ணாத்த’ படத்தில் ஜெகபதி பாபு இணைந்துள்ளார் என்று அறிவித்தது. பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த ஜகபதி பாபு ’இப்படத்தில் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா இரண்டாம் கட்ட அலை பரவிவருவதால் சாதாரண மக்கள் முதல், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
இந்நிலையில், தெலுங்கு முன்னணி நடிகர்களாக  சிரஞ்ச்சீவி, மகேஷ்பாபு ஆகியோரின்  படப்பிடிப்புகள் ஐதராபாத்திலுள்ள ராமோஜிரவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றுவந்த நிலையில் அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆனால், ரஜினியின் அண்ணாத்த படப் பிடிப்பு மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இப்படத்தை தீபாவளிக்குக் கொண்டுவரை படக்குழு முடிவு செய்துள்ளதால் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

தெலுங்கானாவில் தற்போது கொரோனா பரவால் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் இரவில் படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.  அம்மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்த அண்ணாத்த படக்குழு முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்