அஜித்-ன் ‘’வலிமை’’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (21:20 IST)
ஹெச்.வினோத் இயக்க்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்  ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது:

எங்கள் நிறுவனம் கொடுத்த முந்தைய அறிக்கையில் வரும் மே 1 ஆம் தேதி அஜித்குமாரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் எங்கள் நிறுவனத்தில் தயாரிப்பில் உருவான வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்.  அந்த அறிவிப்பு வரும்போது, கொரோனா நோயின் இரண்டாவது அலை வரும் என்றோ அதன் தாக்கம் சுனாமி போலத் தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை.   பலர் தற்போது பொருளாதரம் இழந்து உற்றார் , உறவினர் உயிர் இழந்து நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர்.
எனவே இந்தச் சூழ்நிலையில் ஜி ஸ்டுடியோஸ் பே  வியூ ப்ரோஜெக்ட்ஸ் இப்படத்தில் உள்ள கலைஞர்கள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்துள்ள முடிவின்படி வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் மற்றோரு தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

நாம் அனைவரும் ஒன்றினைந்து அனைவரின் நலத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் பிரார்திப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.#ValimaiUpdate

#Valimai First Look Release postponed to later date. #ValimaiUpdate pic.twitter.com/heieqoVMIl

— Nikil Murukan (@onlynikil) April 23, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்