சோனு சூட் படம் மூலமாக பாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் சாம் சி எஸ்?

vinoth

வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (08:31 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் சாம் சி எஸ்.  விக்ரம் வேதா மற்றும் கைதி ஆகிய படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் கவனம் பெற்றவர் சாம் சிஎஸ்.  கைதி படத்தின் பாடல்களே இல்லை என்றாலும் இவர் அமைத்த பின்னணி இசை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதனால் அவர் தமிழ் சினிமாவில் பின்னணி இசை ஸ்பெஷலிஸ்ட்டாகவேக் கருதப்படுகிறார். மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் படங்களைக் கூட பின்னணி இசைக்காக இவரிடம் கொடுக்கும் அளவுக்கு அந்த துறையில் பெயரெடுத்துள்ளார். புஷ்பா 2 மற்றும் வணங்கான் போன்ற படங்களுக்கு அப்படி இசையமைத்துள்ளார் சாம் சி எஸ்.

இந்நிலையில் இப்போது அவர் பாலிவுட் படம் ஒன்றுக்கு இசையமைக்கவுள்ளார். சோனு சூட் நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அவர் இந்தி சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்