ஆனால், சிவகார்த்திகேயன் 'மதராசி', 'பராசக்தி' உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருந்ததால், சிபி சக்கரவர்த்தியின் திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும், இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தின் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு இசையமைக்க சாய் அபிநயங்கார் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.