விக்டிம்மா?... குற்றவாளியா?... லெஜண்ட்டா? – கவனம் ஈர்க்கும் அனுஷ்காவின் ‘காட்டி’ டிரைலர்!

vinoth

வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (08:42 IST)
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

பாகுபலி படத்துக்குப் பிறகு அனுஷ்கா உடல் எடை அதிகமாகி குண்டாக காணப்பட்டார். அதனால் அவர் சினிமாவை விட்டு விலகி எடைகுறைப்பில் ஈடுபட்டார். கடைசியாக அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளாக எந்தப் படமும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் ‘காட்டி’ என்ற திரைப்படம் அடுத்து ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை கிரிஷ் இயக்கியுள்ளார்.  விக்ரம் பிரபு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்ட இந்த படம் தற்போது செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. இந்நிலையில் இதன் டிரைலர் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வாழும் காட்டி என்ற பழங்குடியின மக்கள் மாஃபியாக்களால் கஞ்சா சுமந்து செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட அதற்கு எதிராக போராடும் பெண்ணாக அனுஷ்கா நடித்துள்ளார். நேற்று வெளியான இந்த டிரைலர் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்