உதயநிதி படத்தில் நடிக்க ஆரம்பிக்கும் போது அதிகம் நம்பியது சந்தானத்தையும், ஹாரிஸ் ஜெயராஜையும். இவர்கள் இருவருமே மனிதன் படத்தில் இல்லை.
சந்தானம் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று கூறியிருப்பதால் கெத்து, மனிதன் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் ஹாரிஸ்...?
இதுபற்றி கருத்து தெரிவித்த உதயநிதி, சந்தானம், ஹாரிஸ் ஜெயராஜ் இருவருமே என்னுடைய படங்களுக்கு பலமாக இருந்தார்கள். அவர்களை தொடர்ச்சியாக என்னுடைய படங்களில் பயன்படுத்தினால், உதயநிதி படம் என்றால் இவர்கள் இருப்பார்கள் என ஒரு முத்திரை விழுந்துவிடும். அதனால்தான் ஹாரிஸுக்குப் பதில் சந்தோஷ் நாராயணன் மனிதன் படத்துக்கு இசையமைத்தார். சந்தானத்துக்குப் பதில் விவேக் நடித்தார்.
புதுப்புது கலைஞர்களுடன் பணியாற்றும்போது புதுவிதமான அனுபவம் கிடைக்கிறது. புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது. அதனால், படத்துக்குப் படம் புதிய கலைஞர்களுடன் பணிபுரிய இருக்கிறேன் என்றார்.
உதயநிதியின் இந்த சோதனை முயற்சி முதல் படமான மனிதனிலேயே வெற்றி பெற்றுள்ளது. அதனால், அவர் தொடர்ந்து புதியவர்களுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.