சூர்யாவின் ''எதற்கும் துணிந்தவன்'' படத்தின் முக்கிய அப்டேட்

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (18:57 IST)
நடிகர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்;  படம் தியேட்டரில் ரிலீஸாகுமா இல்லை ஓடியியில் ரிலிஸாகுமா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு இருந்த நிலையில்  இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஜெய்பீம். இப்படத்திற்கு அடுத்து, சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில்  நடித்து வருகிறார். இப்படம் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது கொரொனா பரவலால் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில், சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள்  அமெசான் பிரைமிங்க் ரிலீஸான நிலையில்,  சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் தியேட்டரில் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்