மனிதக் கண்கள் அழுகிறது…. விஜய் பட நடிகர் டுவீட்

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (17:23 IST)
கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். தமிழில் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும்  சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இப்படத்தில் இரண்டாம் பாகம் எப்போதும் தயாராகும் என விஜய் மற்றும் முருகதாஸ் ரசிகர்கள் அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், துப்பாக்கி படத்தில் விஜய்க்கு நேர் எதிர் ரோலில் வில்லனாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த பாலிவுட் நடிகர்  சமீபத்தில் விஜய்யின் மாஸ்டர் படம் வெற்றியடைய வாழ்த்தினார்.

இந்நிலையில் இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில் மனிதக் கண்கள் அழுகைக்குப் பிறகு எப்படி இருக்கும் என்று துல்லியாமாக கேமராவால் படம்பிடிக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் ரத்தம் வெள்ளை நிறமுள்ள பகுதியில் கருவிழிக்குக் கீழே தெறிப்பதுபோல் உள்ளது. மைக்ரோஸ்கோப்பில் வைத்து எடுக்கப்பட்டதுபோல் உள்ள இப்புகைப்படம்  வைரலாகி வருகிறது. இந்தக் கண்ணின் புகைப்படத்தை மற்றவர்களுக்கு அனுப்புங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்