கோட் டிரைலர் ரிலீஸ் தேதியில் நடந்த திடீர் மாற்றம்!

vinoth

வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (16:29 IST)
விஜய் நடித்துள்ள கோட் (the greatest of all time) திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது நான்கு நாட்கள் முன்கூட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதியே வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களைக் குறிவைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்