என் உடம்பில் சுதந்திரப் போராட்ட ரத்தம் ஓடுகிறது - பிரபல நடிகை

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (16:44 IST)
சமீபத்தில் பாலிவுட் நடிகை பாயல் கோஷ், பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறினார். பின்னர் போலீஸில் புகார் தெரிவித்த அவர் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி பரப்பரப்பு ஏற்படுத்தினார்.

இதுநாட்டில் பேசு பொருளாக மாறியது. குறிபாக அனுராஜ் காஷ்யம் பாஜக மீது கூறிவரும் விமர்சனத்திற்கு பதிலடியாக பாயல் கோஷை பாஜக கட்சியினர் பயன்படுத்திவருவதாகவும் பேசு அடிப்பட்டது.

இதையடுத்து அவர் பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பாயல் கோஷ் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், எனது முன்னோர் சுதந்திரப் போராட்ட வீரர்கள்… அவர்களின் ரத்தம் எனது உடலிலும் ஓடுகிறது…எனவே எந்தக் காரணதுக்காகவும் எனது நற்பெயரை நான் கெடுத்துக்கொள்ள மாட்டேன் எனவும் தீமை செய்பவர்களையும் விடமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்