க்ரோர்பதியில் வென்ற பணத்தில் மனைவிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி – அமிதாப் கோபம்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (16:42 IST)
கவுன் பனேகா க்ரோர் பதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தனது மனைவிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப் போகிறேன் எனக் கூறியதைக் கேட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் அமிதாப் கோபமாகியுள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக கேபிசி நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சமீபத்தில் கலந்துகொண்டார் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கோஷ்லேந்திர சிங் டோமர் என்கிற போட்டியாளர்.  அவர் நிகழ்ச்சியின் மூலம் 40,000 ரூபாய் வென்றார். இந்த பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள் என அமிதாப் அவரிடம் கேட்டபோது ‘என் மனைவியின் முகம் எனக்கு அலுத்துவிட்டது. அதனால் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப் போகிறேன்’ எனக் கூறினார்.

இதைக் கேட்டு கடுப்பான அமிதாப் அவரைக் கண்டித்தார். ஆனால் அவரோ நான் விளையாட்டாக சொன்னேன் எனக் கூறியுள்ளார். ‘இந்த மாதிரி விஷயங்களில் விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லக் கூடாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்