2.o படத்துக்கு இந்த ஆண்டிலே மிகப்பெரிய முன்பதிவு: பிரபல திரையரங்கு தகவல்

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (10:46 IST)
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,அக்ஷய் குமார் , எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 2.o. இன்று அதிகாலை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில்  2.0 படம் வெளியானது. திரையரங்குகளில் அதிகாலையிலேயே குவிந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் உள்ள ரோகிணி மல்டிபிளக்ஸ் தியேட்டரில் இதுவரை இந்த ஆண்டில் இல்லாத அளவுக்கு 2.0படத்துக்கு முன் பதிவு நடந்துள்ளதாக அந்த தியேட்டர் சார்பில் நிகிலேஸ் சூர்யா என்பவர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டு உள்ள ட்விட் பதிவில், ரோகிணி தியேட்டரில் 2.o படத்துக்கு 22 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். விடுமுறை அல்லாத ஒரு தினத்தில் வெளியான இந்த படத்துக்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்