14 வருடங்கள் கழித்து அஜித்தை சந்தித்த நடிகர்

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (23:22 IST)
நடிகர் அஜித்துடன் 14 வருடங்கள் கழித்து பிரபல நடிகர் போட்டோ பிடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்றது. இந்நிலையில், இப்படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகர் அஜித்குமார் 5000 கிமீ பைக் ரைடிங் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், அஜித்குமாருடன் ஏகன் படத்தில் இணைந்து நடித்த நவ்தீவ் 14 வருடங்கள் கழித்து அவருடம் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அஜித்துடன் பலரும் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர். இப்படம் வைரலாகி வருகிறது.  
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்