தங்கலான் ஓடிடி ரிலீஸ் சிக்கல்… படக்குழு செய்த தவறு இதுதானா?

vinoth
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (15:23 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மற்றும் பசுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் உருவாகிய ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் படத்துக்கு விமர்சன ரீதியாக பாராட்டுகள் கிடைத்தாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை தங்கலான் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. தமிழைப் போலவேதான் மற்ற மொழிகளிலும் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

படம் ரிலீஸாகி 50 நாட்களைக் கடந்தும் இன்னும் ஓடிடியில் ரிலீஸாகவில்லை. செப்டம்பர் 20 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் வெளியாகும் என சொல்லப்பட்டது. படத்தின் ஓடிடி வெர்ஷனை குறிப்பிட்ட தேதியில் கொடுக்காமல் படக்குழு தாமதப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் படத்துக்கு நிர்ணயிக்கப்படட் விலையைத் தரமுடியாது என சம்மந்தப்பட்ட ஓடிடி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது சம்மந்தமாக தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இப்போது படக்குழு வேறொரு ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்