தம்பி ராமையா & சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராஜாக்கிளி’… இயக்குனராகும் வாரிசு!

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (09:05 IST)
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நகைச்சுவை நடிகராகவும் அறியப்படுபவர் தம்பி ராமையா. இவர் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவான இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படம் கவனத்தைப் பெற்றது. அதன் பின்னர் மைனா படம் மூலமாக முன்னணி நடிகராகிவிட்ட இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் கதை, திரைக்கதை, வசனம், இசை மற்றும் பாடல்கள் எழுதி ராஜாக்கிளி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

முதலில் தம்பி ராமையா தான் இந்த படத்தை இயக்குவதாக இருந்தார். இந்நிலையில் இப்போது அவரின் மகன் உமாபதி ராமையா இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்