விஜய்யின் அடுத்த படத்துக்கு இசையமைப்பாளர் இவர்தான்! முதல் முறையாக கிடைத்த வாய்ப்பு!

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (08:38 IST)
விஜய் அடுத்து நடிக்கும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் 64 ஆவது படமான மாஸ்டர் திரைப்படம் இப்போது ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. இந்த படத்தை கைதி மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாக வுள்ள நிலையில் அடுத்ததாக விஜய் படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

அந்த இயக்குனர்கள் பட்டியலில் சுதா கொங்கரா மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியவர்களின் பெயர்கள் இடம்பெற்று வந்தன. ஆனால் எதுவும் உறுதியாக அறிவிக்கப்படாத நிலையில் இப்போது விஜய், தனது மெஹா ஹிட் படமான துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தர்பார் படத்தின் தோல்வியை அடுத்து வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்ற உந்துதலில் முருகதாஸ் இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.  தமன் தமிழிலும் சில படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும் பெரிய ஹீரோ படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு இப்போதுதான் முதல்முறையாகக் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்