ஊரடங்கு அமலில் இருப்பதால் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட முடியாவிட்டாலும், ட்விட்டரில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்துள்ளனர். 1.4 மில்லியனுக்கும் அதிகமாக பதிவான இந்த ஹேஷ்டேகுகள் உலக லவல் ட்ரெண்டிங்கில் உள்ளன. இதுதவிர #NanbarAjith என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தல ரசிகர்களுக்கு போட்டியாக ட்விட்டரில் களம் இறங்கிய தளபதி விஜய் ரசிகர்கள் விஜய்யின் மாஸ்டர் குறித்தும் விஜய் பற்றியுமான ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #Master #VijayTheFaceOfKollywood ஆகிய ஹேஷ்டேகுகள் மில்லியன் கணக்கில் பதிவிடப்பட்டு ட்ரெண்டாகி வருகின்றது. அதை தொடர்ந்து அஜித் ரசிகர்களும் அவர் குறித்த ஹேஷ்டேகுகளை ட்ரெண்டாக்குவதில் மும்முரமாய் ஈடுபட்டுள்ளனர். இதனால் வழக்கம்போல இன்றும் தல தளபதி ரசிகர்களிடையே ட்விட்டர் ட்ரெண்டிங் மோதல் தொடர்கிறது.