வீல் சேரில் விஜய்! வைரலாகும் தளபதி 63 புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (13:52 IST)
தளபதி 63 சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் வீல் சேரில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
 

 
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.
 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு படுமும்முரமாக தற்போது நடைபெற்று வருகிறது. 
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டி  பற்றிய கதை என்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. பெரிய கால் பந்தாட்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


 
இந்நிலையில் தற்போது,  தளபதி 63 படப்பிடிப்பு தளத்தில் விஜய் கழுத்தில் கட்டு போட்டுக்கொண்டு வீல் சேரில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்