’தளபதி 68’ படத்தின் வியாபாரம் அதற்குள் தொடக்கம்: ஆச்சரியத்தில் கோலிவுட்..!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (18:43 IST)
தளபதி விஜய் நடித்த 67வது திரைப்படமான லியோ படத்தின் வியாபாரமே இன்னும் முடிவடையாத நிலையில் வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியான தளபதி 68 படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் தளபதி 68. 
 
இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது என்பதும் இந்த படத்திற்காக முழு 3டி ஸ்கேன் செய்ய சமீபத்தில் விஜய் அமெரிக்கா சென்று வந்தார் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அது மட்டும் இன்றி இந்த படத்தின் பாடல்கள் உரிமையை டி சீரியஸ் என்ற நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக தெரிகிறது. 
 
நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் - யுவன் சங்கர் ராஜா இணைவதால் இந்த படத்தின் பாடல்களுக்கு  மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்