ரஜினி அஜீத் பாணிக்கு திரும்பும் விஜய்: புதிய தகவல்

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (22:43 IST)
ரஜினி, அஜித், விஜய் ஆகிய மூன்று மாஸ் நடிகர்களுமே கடந்த சில வருடங்களாக அதிரடி ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட குடும்ப, காதல் மற்றும் ரொமான்ஸ் கதைகளை மறந்தே விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. குடும்ப சென்டிமென்ட் மிக அதிகமாக உள்ள இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து தற்போது ரஜினிக்கும் மீண்டும் ’படையப்பா ’வீரா’ மாதிரி ஒரு குடும்பத் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று சிறுத்தை சிவாவிடம் சொல்ல தற்போது உருவாகிவரும் ’தலைவர் 168’ திரைப்படமும் முழுக்க முழுக்க ஒரு குடும்பப் படமாக உருவாகி வருகிறது 
 
இந்த நிலையில் நாமும் கொஞ்சம் ஆக்சனில் இருந்து விலகி குடும்ப கதைக்கு மாறுவோம் என்று விஜய் முடிவு செய்துள்ளாராம். இதனை அடுத்து அவருடைய அடுத்த படம் தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் பாண்டியராஜன் அவர்கள் தளபதி 65 படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது பாண்டிராஜுக்கும் சன் பிக்சர்ஸ் இருக்கும் நல்ல உறவு என்பதால் இதனை பயன்படுத்தி சன் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குனர் பாண்டியராஜ் என்றால் ஓகே என்று சொல்லிவிட்டார்களாம். எனவே ’தளபதி 65 ’திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்