இதில், கலந்து கொண்டு பேசிய நடிகர் பவன், குருவி படத்தின் 150 நாள் விழாவில் கலந்து கொண்டதாகவும், அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை ; ஆனால் அசுரன் படத்துக்கு நடந்திருக்கு என பேசினார். அதைக் கேட்ட தனுஷ் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து பேசிய தனுஷ், இந்த விழா நடைபெறுகின்றபோது, நாம் பேசுவது நம்ம கண்ட்ரோல்ல இருக்கும் அதனால் எடு சரியாக உள்ளதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் ; சரியில்லாததை விட்டு விடுங்கள் என தெரிவித்து பவன் பேசிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.