'தளபதி' ரசிகர்களிடம் அடி வாங்கி மன்னிப்பு கேட்ட 'தல' ரசிகர்

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (23:08 IST)
ஃபேஸ்புக்கில் தளபதி விஜய் குறித்து தவறாக பேசியதன் காரணமாக விஜய் ரசிகர்களிடம் அடி வாங்கி மன்னிப்பு கேட்ட 'தல' ரசிகர் ஒருவரின் வீடியோ பேச்சு தற்போது ஃபேஸ்புக் டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது



 


அம்பத்தூரை சேர்ந்த தல அஜித் ரசிகர் ஒருவர், தனது ஃபேஸ்புக்கில் விஜய் குறித்து தவறான கருத்து ஒன்றை பதிவு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் அந்த நபரை கண்டுபிடித்து அடித்து மன்னிப்பு கேட்க வைத்தனர். அவர் தனது மன்னிப்பு வீடியோவில், 'தெரியாமல் தளபதி குறித்து தவறாக பேசிவிட்டேன். இனிமேல் இப்படி பேசமாட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்.

என்னுடைய டீமிலேயே தளபதி ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களும் என்னை திட்டினர், ஒருசிலர் என்னை அடித்தனர். என்னுடைய தவறை புரிந்து கொண்டேன். நான் சின்ன பையன், தெரியாமல் செய்த தவறுக்கு மீண்டும் மன்னிப்பு கேட்கின்றேன்' என்று அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் மிக வேகமாக ஷேர் செய்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோவை பார்க்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள் https://twitter.com/VignesHari1/status/859463041213239296
அடுத்த கட்டுரையில்