அஜித் படத்துடன் கனெக்சன் ஆகிறது சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (23:01 IST)
ரஜினி பட தலைப்பான சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' திரைப்படம் ரஜினியின் 'கபாலி' படத்தின் லொகேஷன் மலேசியாவில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.





இந்நிலையில் இதுவரை ரஜினி படங்களின் கனெக்சனில் இருந்த 'வேலைக்காரன்' தற்போது அஜித் படமான 'ஆரம்பம்' படத்துடன் கனெக்சன் ஆகிறது.

ஆம், இந்த படத்தின் மிக முக்கிய கேரக்டர் ஒன்றில் 'ஆரம்பம்' படத்தில் நடித்த மகேஷ் மஞ்ஜ்ரேக்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பகத் பாசிலுக்கு அப்பாவாக மகேஷ் நடிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்