'குளோபல் ஸ்டார்' ராம்சரண்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் - இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்

J.Durai
செவ்வாய், 26 மார்ச் 2024 (08:07 IST)
எஸ். எஸ். ராஜமௌலியின் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சுகுமாருடன் ராம் சரண் இணைந்திருப்பது.. நடிகரின் திரையுலக பயணத்தில் புதிய மைல்கல் ஆகும். 
 
'ஆர் ஆர் ஆர்' படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு ராம்சரண் உலகளாவிய நட்சத்திரமாக உயர்ந்தபோது.. இயக்குநர் சுகுமார் அவரது இயக்கத்தில் வெளியான 'புஷ்பா' படத்தின் வெற்றியால் பெரும் புகழை பெற்றார். 
 
இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
பெயரிடப்படாத இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பிரம்மாண்டமாக வெளியிடுவதை இலக்காகக் கொண்டிருக்கிறது. 
 
'ரங்கஸ்தலம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் -சுகுமார் -மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 'ராக்ஸ்டார்' டிஎஸ்பி கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. 
 
இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. 
 
'குளோபல் ஸ்டார்' ராம்சரண்  மற்றும் சுகுமார் இணைந்திருப்பதால்.ரசிகர்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பான் இந்திய சினிமா அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்