ராம்சரண் நடிப்பில் புஜ்ஜிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் படத்தின் தலைப்பு இதுதான்!

vinoth

திங்கள், 18 மார்ச் 2024 (07:35 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர்  இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது,  அவர் ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்யின் வாரிசு படத் தயாரிப்பாளர் தில்ராஜூ  தயாரித்து வருகிறார். இந்த படம் நீண்டகாலமாக உருவாக்கத்தில் உள்ளது.

இதையடுத்து ராம்சரண் உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தற்போது RC16 என அழைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் இணைந்துள்ளார். இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்துக்கு பெடி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு ராம்சரணின் பிறந்த நாளன்று அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்