இந்த கால திருடனுக்கு உன் வீட்டு சாவி தேவையில்லை: அட்டகாசமான இரும்புத்திரை டீசர்

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (23:00 IST)
விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் மித்ரன் இயக்கியுள்ள 'இரும்புத்திரை' திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் டிஜிட்டல் உலகில் ஏற்படும் பிரச்சனைகளும், அதனால் ஏற்படும் பயங்கர விளைவுகளும் கூறப்பட்டுள்ளதாக டீசரில் இருந்து தெரியவருகிறது

ஒவ்வொரு இன்பர்மஷனுக்கும் ஒரு விலை உண்டு என்ற அர்ஜூனின் குரல், இணையதளங்களில் நடக்கும் கண்ணுக்கு தெரியாத குற்றங்களை மறைமுகமாக விளக்குகின்றது. ஒவ்வொருத்தரோட கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு பின்னாடியும் ஒரு இரும்புத்திரை இருக்கு என்ற வசனம் பல விஷயங்களை நம்மை ஊகிக்க வைக்கின்றது

விஷாலின் மிலிட்டரி யூனிபார்ம், சமந்தாவின் அழகு, அர்ஜூனின் வில்லத்தனம் ஆகியவைகள் கொண்ட 'இரும்புத்திரை' டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

விஷால், அர்ஜூன், சமந்தா, மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்