மேற்கு வங்காளத்தில் நடிகை மிமி சக்ரபொர்த்தியிடம் ஆபாசமாக பேசிய டாக்ஸி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகையாக இருப்பவர் மிமி சக்ராபொர்த்தி. இவர் சமீபத்தில் தனக்கு நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த வாரம் திங்கட் கிழமை இரவு, அவர் காரில் வந்து கொண்டிருந்த போது, அருகில் வந்த டாக்ஸி டிரைவர் ஆபாசமான வார்த்தைகளால் அவரிடம் பேசியுள்ளார். அவர் குடிபோதையிலும் இருந்துள்ளார்.
இதையடுத்து காரை நிறுத்தி அவரை திட்ட ஆரம்பித்துள்ளார் மிமி. இதனால் அங்கு கூட்டம் கூட, டாக்ஸி டிரைவர் அங்கிருந்து ஓடியுள்ளார். இதனால் மிமி கொல்கத்தா போலிஸிடம் புகார் அளித்துள்ளார். விசாரணையைத் தொடங்கிய போலீஸார் இப்போது அந்த டாக்ஸி டிரைவரைக் கைது செய்துள்ளனர்.