கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மாணவியான ஆதி ஸ்வரூபா தனது இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதும் திறன் பெற்றுள்ளார். அப்படி எழுதினாலும் ஒவ்வொரு கைகளாலும் நிமிடத்துக்கு 45 வார்த்தைகளை எழுதும் அளவுக்கு வேகமாக எழுதுகிறார். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் வல்து கையால் ஒரு மொழியையும் இடது கையால் வேறொரு மொழியையும் எழுதும் அளவுக்குக் கூட அவர் தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.