வேட்டையன் படத்துக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா?

vinoth
திங்கள், 8 ஏப்ரல் 2024 (10:56 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின்  பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. படம் அக்டோபரில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை முடித்து ஞானவேல் அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தை இயக்க உள்ளாராம்.இந்த படத்தில் நானி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்