லீனா மணிமேகலையிடம் கேள்வி கேட்கும் சுசி கணேசன் மனைவி

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (14:09 IST)
மி டூ விவகாரத்தில் இயக்குனர் சுசி கணேசன் மீது புகார் கூறியுள்ள லீனா மணிமேகலைக்கு சுசி கணேசனின் மனைவி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மி டூ விவகாரம் தமிழ் சினிமாவில் முக்கிய விவாதப் பொருளாக மாறக் காரணமானவர்களில் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையும் ஒருவர். 13 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் சுசி கணேசன் தன்னை அவருடையக் காரில் வைத்து பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறினார். இந்த புகாருக்கு மறுப்புத் தெரிவித்துள்ள சுசி கணேசன் லீனா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

இதனையடுத்து தற்போது சுசி கணேசனின் மனைவி மஞ்சரி லீனா மணிமேகலைக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் ‘பாதிக்கப்பட்டவரின் மனைவியாக, லீனாவின் ப்ர்ஸ் மீட்டைப் பார்த்தேன். அதில் சின்மயி உள்ளிட்டவர்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்க, அங்கு என்ன நடந்தது என்ற சாதாரண கேள்விக்கே லீனா பதிலளிக்காமல் அங்குள்ளவர்களிடம் கத்திக் கொண்டிருக்கிறார். அவர் நேர்மையானவராக இருந்தால் தான் பாதிக்கப்பட்டதை அங்குள்ளவர்களுக்கு விளக்கி இருக்க வேண்டும். அங்கிருந்த ஒரு பெண் பத்திரிக்கையாளருரிடம் ‘ஒரு பெண்ணாக இருந்து கொண்டு எப்படி இம்மாதிரியான கேள்விகளை உங்களால் கேட்க முடிகிறது என்று கத்துகிறார்.’ இந்த விஷயத்தில் ஆண் பெண் வேறுபாடு எங்கிருந்து வந்தது. லீனாதான் பெண் என்ற போர்வைக்குள் தனது பொய்களை மறைக்கிறார்.’

’லீனா, தானோர் இருபாலின உறவினர் என தைரியமாக வெளி உலகத்துக்கு சொல்லும் அளவுக்கு தைரியமானவர் எனும்போது அவரால் எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்க இயலும். பாதிக்கப்ப்ட்ட ஒருவராக நான் இப்போது பத்திரிக்கையாளர்கள் கேட்ட அதே கேள்வியையே இப்போது நானும் கேட்கிறேன். ‘அந்த இண்டர்வியூ எப்போது நடந்தது?, தேதி?, நேரம்?, சம்பவம் நடந்த தெரு? போன்றவற்றை வெளியிட வேண்டும். லீனாவின் பொய்களுக்கு துணை நிற்பவர்கள் அவரை இந்த விவரங்களை வெளியிட சொல்லுங்கள்’.
’மனிதர்கள் தங்களுக்கு நடந்த நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களையே நீண்ட நாட்கள் நியாபகம் வைத்திருப்பார்கள். அதனால் இந்த விவரங்களை அவர் மறந்திருக்க வாய்ப்பில்லை.மேலும் லீனா தனது முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இன்னும் சிலரது பெயரை வெளியிடுவேன் என சொல்லி இருந்தார். அவர்களை மிரட்டி பணம் வாங்குவதற்காக எனது கணவனைப் பலிகடா ஆக்கி இருக்கிறாரா?.’

’மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவர்கள் போலிஸ் மற்றும் நீதிமன்றங்களின் மேல தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறியுள்ளனர். இப்போது ஊடகங்களையும் இப்படி நடத்துகின்றனர். பின் எங்கு சென்றுதான் இவர்கள் நீதி கேட்கப் போகிறார்கள். லீனாவுக்கு ஆதரவு அளிப்பவர்களே கொஞ்சம் யோசியுங்கள்’ என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்