சுஷாந்த் சிங் மரணம்… பிரபல சினிமா நட்சத்திரங்கள் மீது குற்றச்சாட்டு..

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (11:28 IST)
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பாலிவுட்டில்  மட்டுமல்ல இந்தியாவையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் நெருங்கிய தோழியிடன் போலீஸார் 8 மணி நேரம் விசாரணை செய்துள்ளனர்.

வியாழக்கிழமை சுஷாந்தின் பிஆர். மேலாளர்  ராதிகா நிஹாலானி, முன்னாள் மேலாளர் ஸ்ருதி மோடி ஆகியோருடன் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர் போலீஸார்.

மேலும், சுஷாந்தின் நெருங்கிய தோழி ரியா சக்கரவர்த்தியை பந்த்ரா காவல்நிலையத்திற்கு அழைத்த  போலீஸார் சுமார் 10 மணிநேரம் விசாரித்துள்ளனர்.

முக்கியமாக பிரபல நடிகர் சல்மான் கான் கொடுத்த அழுத்தம் காரணமாக சுஷாந்த் தொடர்ச்சியாக படங்களில் இருந்து நீக்கப்பட்டதாகவும்; அதனால் சல்மான் கான், கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பண்சாலி, ஏக்தா கபூர் ஆகிய 8 பேர் சுஷாந்த்தை தற்கொலைக்குத் தூண்டியதாக ம்னுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கொண்டு தகவல்கள் வெளியாக வாய்புள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்