பிரபல நடிகைக்கு கொரோனா! டெஸ்ட் செய்ய பணமில்லாமல் சிரமம்!
வியாழன், 18 ஜூன் 2020 (18:10 IST)
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிகப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 லட்சத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிகப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்றைத்தடுக்க அரசு வரும் 30 ஆம் தேதிவரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மானுடன் வீர்காடி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பூஜா தட்வால் கொரோனா தொற்று இருப்பதாகவும், ஆனால் டெஸ்ட் செய்வதற்கு கூட அவர் பணமில்லாமல் சிரமத்தில் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.